கழுதையில் வீரர்கள்- முக்காடு:கிரிக்கெட்டுக்கு எதிராக ராமதாஸ் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னைகிரிக்கெட்டை ஒழித்துக் கட்டி விட்டு, சடுகுடு, சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை சர்வதேச அளவுக்குக் ெகாண்டு செல்ல வேண்டும் என்று கோரியும், இந்திய கிரிக்கெட் வீரர்களை நக்கலடித்தும் சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழக மான மீட்புக் கழகம் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தினர்.


நேரம்: இன்று காலை. இடம்: மெமோரியல் ஹால், பாரிமுனை சென்னை. இந்திய வீரர்கள் அணியும் சீருடையுடன், கையில் மட்டை சகிதம் 11 பேர் அணிவகுத்து வந்தனர். இன்ெனாரு புறம் சிலம்புடன் சிலரும் கூடினர்.

என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள் இங்கு கூடி என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் ரவுண்டு கட்டி நிற்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அங்கு வந்தார். கூடவே திரளான பாமகவினரும், தமிழக மான மீட்பு இயக்கத்தினரும் குழுவினர்.

பின்னர் கிரிக்ெகட் வேடம் போட்டவர்கள் மோசமாக கிரிக்ெகட் ஆடுவது போல நடித்தனர். மறுபக்கம் சிலம்பாட்டமும், சடுகுடு ஆட்டமும் களை கட்டியது. சடுகுடு, சிலம்பாட்டத்திற்கு முன்பு நிற்க முடியாமல், கிரிக்கெட் வீரர்கள் திணறி, தலையில் முக்காடிட்டுக் ெகாண்டு ஓடுவது போல நடித்தனர்.


அவர்களை சிலம்பாட்டக்காரர்களும், சடுகுடு ஆட்டக்காரர்களும் ேசர்ந்து கழுதை மீது ஏற்றி அனுப்புவது போல காட்சிகள் இடம்பெற்றன. இந்த நாடகத்தை ராமதாஸும் மற்றவர்களும் ஆரவாரத்தோடு, கைத தட்டி ரசித்தனர்.

பின்னர் ராமதாஸ் பேசுகையில், முதலில் கிரிக்ெகட்ைட ஐந்து ஆண்டுகளுக்கு ஒழிக்க வேண்டும். நேரடி ஒளிபரப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும். கிரிக்ெகட்டை டிவியில் ேபாடுவதால் விடிய விடிய அதை அமர்ந்து பார்த்து உடலையும் கெடுத்துக் கொள்கிறார்கள், மனித உழைப்பும் வீணாகிப் போகிறது. எனவே முதலில் நேரடி ஒளிபரப்பை ரத்து செய்ய ேவண்டும்.

கிரிக்கெட் பார்க்க தங்களது குழந்தைகளை பெற்ேறார்கள் அனுமதிக்கக் கூடாது. பிற விளையாட்டுக்களைக் காண, விளையாட அவர்களை ஊக்குவிக்கலாம். கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற ஆட்டங்களுக்கு நல்ல முக்கியத்துவம் தர வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம், சடுகுடு, ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டும்.

இவற்றை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக்க வேண்டும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாவட்டந்தோறும் சடுகுடு, சிலம்பாட்டம் ஆகியவற்ைறக் ெகாண்டு செல்ல குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ேளன் என்றார் ராமதாஸ்.

பின்னர் கிரிக்கெட் வீரர்களை கழுதையில் ஏற்றும் போராட்டமும் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+