டான்சர் குட்டி மாடியிலிருந்து விழுந்து மரணம்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:இயக்குநர் கேயாரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான டான்சர் படத்தில், ஒற்றைக்காலுடன் அபாரமாக ஆடி நடித்து அசத்திய நடிகர் குட்டி, பரமக்குடியில் கலை நிகழ்ச்சிக்காக போன இடத்தில் மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

டான்சர் படத்தில் டான்ஸராக அறிமுகமானவர் குட்டி. இவருக்கு வலது கால் கிடையாது. இருந்தாலும் இடது காலை மட்டும் வைத்துக் கொண்டு மிக அபாரமாக டான்ஸ் ஆடி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

டான்சர் படத்தால் பிரபலமைடந்த குட்டி பல்வேறு ஊர்களுக்கும் போய் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். பரமக்குடியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி குட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பரமக்குடிக்கு வந்திருந்த குட்டி, நேற்று இரவு தான் தங்கியிருந்த லாட்ஜ் மாடியில் நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.

உடனடியாக பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் குட்டியைக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே குட்டி பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக குட்டியின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

குட்டியின் தந்தை ஜெயபால். சென்னை சாலிகிராமத்தில் உள்ளார். மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் அவரது பெற்றோர் அலறி அடித்தபடி மதுரைக்குக் கிளம்பிச் சென்றனர்.

குட்டியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+