மகாராஷ்டிரா, கர்நாடகா, கொல்கத்தாவில் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? லாலு டென்ஷன்
டெல்லி:கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் சில மாநிலங்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு தரப்படுகிறது. மற்ற மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கோபமாக கூறியுள்ளார்.
டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 72 இருக்கைகள் கொண்ட ஏசி மூன்றடுக்குப் பெட்டியைப் பார்வையிட்ட லாலு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரது பேச்சு கிரிக்கெட் பக்கம் திரும்பியது. லாலு கூறுகையில், கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும் கொள்கை மிகவும் பாரபட்சமாக உள்ளது.
சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே அது முக்கியத்துவம் தருகிறது. பிற மாநிலங்களை கண்டுகொள்வதே இல்லை.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கொல்கத்தாவில் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? மற்ற பகுதிகளில் யாரும் கிரிக்கெட் விளையாவடுதே இல்லையா?
உலகக் கோப்பைக் கிரிக்கெட் அணியில் முகம்மது கைப்பை ஏன் சேர்க்கவில்லை? அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீரர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அணி உருப்படும்.
மற்ற மாநிலங்களிலும் நல்ல வீரர்கள் நிறையவே உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பது நியாயமற்றது.
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான். இருந்தாலும் உலகக் கோப்பைப் போட்டியில் பெற்ற தோல்வியிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அணியில் நிறைய இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றார் லாலு.
பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் லாலு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications