செல்போன் மூலம் ஆபாச பட விற்பனைசென்னையில் வாலிபர் கைது
சென்னை:செல்போன் மெமரி கார்டு மூலம் ஆபாசப் படங்களை கல்லூரி மாணவ, மாணவியருக்கு விற்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள ஆபாச சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பர்மா பஜாரில் இந்திய மற்றும் வெளிநாட்டு நடிகைகளின் ஆபாச படங்களை செல்போன் மெமரி கார்டில் பதிவு செய்து ரூ. 2000க்கு கல்லூரி மாணவ, மாணவியருக்கு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு ஆபாச மெமரி கார்டுகளை விற்ற கும்பலை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் கண்ணில் சிக்காமல் அக்கும்பல் தப்பி வந்தது.
முன்பே நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் இந்த மெமரி கார்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர் போல ஒருவரை அந்த கடைக்கு அனுப்பினர். ஆனால் அந்த கடைக்காரரோ அப்படி ஒன்றும் இங்கு கிடையாது என கூறினார்.
ஆனால் போலீஸ் அனுப்பிய அந்த இளைஞர் மிகவும் வற்புறுத்தி கேட்கவே ரூ.2000 வாங்கிக் ெகாண்டு கார்டைக் கொடுக்க முன்வந்தார் கடைக்காரர்.
அப்போது மறைந்திருந்த போலீஸார் பாய்ந்து சென்று கடைக்காரரை வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து ஆபாச படங்கள் அடங்கிய மெமரி கார்டுகளை கைப்பற்றினர்.
இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த மஜி என்ற மஜீத்(30) கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த 2,200 சிடிக்கள், டிவிடிக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
தனது கடையில் பாதாள அறை அமைத்து அதில் ஆபாச சிடிக்களைப் பதுக்கி வைத்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கு சிடிக்கள் தவிர ஏராளமான செல்போன் மெமரி கார்டுகளும் இருந்தன.
மஜீத் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், என்னிடமுள்ள படங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதால் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு கார்டு ரூ.2000க்கு விற்றேன்.
பல ஆண்டுகளாக இந்த விற்பனையை செய்து வருகிறேன். பல ஊர்களிலிருந்தும் என்னை தேடி வருவார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆள் வைக்காமல் நானே நேரடியாக விற்று வந்தேன்.
வியாபாரம் மிக நன்றாக போய்க் கொண்டிருந்தது. வாரத்திற்கு 1000 சிடிக்கள் வரை விற்று விடுவேன். மெமரி கார்டுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறேன். வெளிநாடுகளிலும் எனக்கு நிறைய பேருடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications