விதியை மீறிய மல்ட்டிபிளக்ஸ்-சிஎம்டிஏ நோட்டீஸ்
சென்னை:சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சிட்டி சென்டர் மல்ட்டிபிளக்ஸ் கட்டட வளாகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்க முடிவு செய்துள்ள சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழமம் (சிஎம்டிஏ) கட்டடத்தில் உள்ள நிறுவனங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நகரின் முக்கியப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில், சிட்டி சென்டர் என்ற பெயரில் ஒரு மல்ட்டிபிளக்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு ஐனாக்ஸ் என்ற அதி சொகுசு திரையரங்கம், லேண்ட்மார்க் புத்தக நிலையம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
![]() |
இந்த கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகவும், பல விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் சிஎம்டிஏ குற்றம் சாட்டியுள்ளது.
கட்டட வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது போல கட்டடம் கட்டப்படாமல் பல மாற்றங்களுடன் கட்டப்பட்டுள்ளால் கட்டடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேட்டு கடந்த அக்டோபர் மாதம் சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் இந்த நோட்டீஸுக்கு சிட்டி சென்டர் உரிமையாளர்கள் பதில் தரவில்லை. இதையடுத்து தற்போது இந்தக் கட்டடத்தை இடிக்கவுள்ளதாகவும், அதற்கு வசதியாக கட்டடத்தில் வள்ள அனைத்து நிறுவனங்களும் காலி செய்ய வேண்டும் எனவும் கூறி சிஎம்டிஏ புதிதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த கட்டமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் சிஎம்டிஏ அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications