சிறுபான்மையினர் நல இயக்குநரகம்: கருணாநிதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகத்தை உருவாக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சிறுபான்மையினர் நல இயக்குநரகத்தை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறுபான்மை வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தவும், அதற்கான திட்டங்களை விரைவாக அமல்படுத்தவும் வசதியாக சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம் அமைக்கப்படும் என அரசின் நிதி நிலை அறிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் இதற்கென தனி இயக்குநரகத்தை உருவாக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த இயக்குநரகம் உரிய ஊழியர்களுடன் சுதந்திரமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+