ஓட்டுக்காக தடம் மாறும் ஜெ.: கருணாநிதி
சென்னை:கல்வி மற்றும் அரசுப் பணியில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது ஓட்டு வங்கியை மனதில் வைத்துத்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் கருணாநிதி நேற்று பேசுகையில், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் அரசுப் பணியில் தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. யாரும் எதிர்பாராத வகையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்ட மதோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா.
ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு தனது நிலையிலிருந்து மாறியுள்ளார். அதனால்தான் தனது கட்சி எம்.எல்.ஏக்களை விட்டு இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க கூறியுள்ளார் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications