செருப்பைக் காட்டுவது நாகரீகமா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சட்டசபையில் செருப்பை தூக்கி கொண்டு தாக்க வரும் காட்சியை பார்த்தாலே தெரியும், யார் நாகரீகம் இல்லாத கூட்டத்திற்கு தலைவர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையில், கருணாநிதி ஒரு அடிப்படை நாகரீகமே இல்லாத கூட்டத்திற்குத் தலைவர் என்று கூறியுள்ளாரே.

கருணாநிதி: தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் செருப்பைத் தூக்கிக் கொண்டு தாக்க ஓடி வந்த புகைப்படம் ஏடுகளில் எல்லாம் வெளிவந்திருப்பதைப் பார்த்தாலேஅடிப்படை நாகரீகம் இல்லாத கூட்டத்திற்கு யார் தலைவர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: விலையேற்றத்தை கட்டுபடுத்த ரேஷனில் விற்கப்படும் ருட்கள், குறைந்த விலையில் கிடைக்குமா, அல்லது வெளிச் சந்தை விலையில் கிடைக்குமா என ஜெயலலிதா கேட்டிருப்பது குறித்து?

கருணாநிதி: வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்தி நியாயமான விலையில் விற்பதற்குத்தான், இதுகூடவா முன்னாள் முதல்வருக்கு தெரியாது. தன்னால் தான் நியாய விலை கடையில் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது என தம்பட்டம் அடிக்க தயாராகிறார் போலும்.

அவரது ஆட்சிக் காலத்தில் விலையை குறைக்க முயற்சிக்கவில்லை. திமுக அரசு இதை செய்வதால் அவரால் பொறுக்க முடியவில்லை.

கேள்வி: திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என சிலர் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனரே?

கருணாநிதி: திமுக ஆட்சி அமைந்த பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தபடவில்லை. திட்டமிட்டு பொய் சொல்லி வந்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

சென்னை-விழுப்புரம் பேருந்தில் ரூ.45 கட்டணத்தில் பயணம் செய்தால் வழியில் 20 இடங்களில் நிற்கும் ஆனால், ரூ.52 கட்டணத்தில் பயணம் செய்தால் 4 இடங்களில் மட்டுமே நிற்கும். இது கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஒன்று. திமுக ஆட்சியில் அல்ல.

கேள்வி: இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததா?

கருணாநிதி: ஏப்ரல் 2ம் தேதி நான் எழுதிய கடித்தத்திற்கு மத்திய சட்டதுறை அமைச்சர் பரத்வாஜ், தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிகளைப் பற்றி ஆய்வு செய்யும்படி வழக்கறிஞரிடம் கூறியுள்ளேன். இதற்காக முயற்சி எடுப்போம் என கூறியுள்ளார்.

இதே போல, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், தாங்கள் கூறியுள்ள வழிமுறைகளுக்கு நன்றி. மத்திய அரசு அடுத்த நடவடிக்கைகளை பற்றி முடிவெடுப்பதற்கு தாங்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என நான் உறுதியளிக்கிறேன் என எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கேள்வி: ஐதராபாத் திராட்சை தோட்ட நில விவகாரம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்திருப்பது குறித்து?

கருணாநிதி: ஐதராபாத்திற்கு அருகே 7.5 ஏக்கர் நிலம் ஜெயலலிதாவிற்கு உள்ளது. இதில் தான் திராட்சை தோட்டமும், பண்ணை வீடும் உள்ளது. இது ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதை வாங்குவது தவறு, அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஆந்திர அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக ஜெயலலிதாவிற்கு நிலங்களுக்கான ஆதரங்களைக் காட்ட வேண்டுமென கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது இதற்கு அவகாசம் கேட்ட ஜெயலலிதா இப்போது திடீரென கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வர எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என நீங்களே கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+