வெடி விபத்து நடந்தது எப்படி? டிஜிபி விளக்கம்
விழுப்புரம்:200 கிலோ வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கொண்டு சென்றதாலும், அந்த வெடிபொருட்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதாலும்தான் விழுப்புரம் அருகே பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே செந்தூர் என்ற இடத்தில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால், 20 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை டிஜிபி முகர்ஜி நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை மாநிலம் மணலிப்பேட்டையைச் சேர்ந்த சேகர் என்ற வெடிபொருள் விற்பனையாளரிடம் 200 கிலோ வெடிபொருட்களை வாங்கிக் கொண்டு காரில் கொண்டு வந்துள்ளனர்.மிகவும் அஜாக்கிரதையாக இவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இந்த வெடிபொருள் ஒன்றுடன் ஒன்று மோதி உராய்ந்ததால் அவை வெடித்துள்ளன.
இந்த வெடிபொருள், பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் கால்ஷியம் அம்மோனியம் நைட்ரேட் வகை வெடிபொருளாகும்.
சேகர் உரிமம் பெற்ற விற்பனையாளர் என்றாலும் கூட அலட்சியப் போக்கில் அவர் வெடிபொருட்களை விற்றுள்ளார் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.
இதற்கிடையே,சேகர், அவரது தொழிற்சாலை கிட்டங்கியின் காவலாளி மற்றும் வெடிபொருட்களை வாங்கிக் கொண்டு வந்த 2 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications