உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசித் தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு இன்று காலை 11.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரமும் அவை வெடித்துச் சிதறும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் அங்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அத்தகவல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications