நடக்க முடியாததால் உ.பி செல்லவில்லை-ஜெ
சென்னை:நடக்கக் கூட முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்தான் உ.பி பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைராஜின் மகன் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட அதிமுகவினரின் திருமணங்களை சென்னையில் ஜெயலலிதா இன்று நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கழகம் குடும்பம் என அண்ணா கூறினார். ஆனால் அண்ணாவின் வழிவந்தவர் என்று கூறி வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் ஒருவர் தனது குடும்பம்தான் கழகம் என்கிறார். ஆனால் நாம் அப்படி அல்ல, அதிமுகவைத் ேதாற்றுவித்த எம்.ஜி.ஆர். வழி வந்தவர்கள். அந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் அன்புடனும், பாசத்துடனும் இருந்து வருகிறோம்.
இன்று அரசியல் நடத்துபவர்கள் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும், கவிதைகளையும் எழுதி அற்ப பிழைப்புக்காக ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சுயநலக்காரர்களால் நாடு எப்படி உயரும்.
கருணாநிதி முதல்வரான பிறகு தமிழகத்தில் பயங்கரவாதிகளும், ரவுடிகளும் சுதந்திரமாக உலவுகிறார்கள். தமிழகம் அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. உடனடியாக இந்த அரசை குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
நான் உ.பி.க்கு தேர்தல் பிரசாரத்திற்குச் ெசல்லாதது குறித்து பத்திரிக்ைககளில் பல்வேறு யூகங்கள் செய்திகளாக வந்துள்ளன. அது இன்னும் வளர்ந்து, தலை, கொம்பு எல்லாம் முளைப்பதற்கு முன்பு நான் ஏன் செல்லவில்லை என்பதை விளக்கி விடுகிறேன்.
பரேலிக்கு நான் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் திண்டிவனத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து விட்டது. அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு சென்ைன திரும்ப நள்ளிரவாகி விட்டது.
அப்ேபாது வண்டியில் ஏறும்போது காலில் அடிபட்டு விட்டது. எப்படியோ சிரமப்பட்டு இன்று வந்து விட்டேன். இதனால்தான் நான் உ.பி. செல்ல முடியவில்லை. இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
இன்னொரு செய்தியும் இருக்கிறது. அதையும் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன். 12ம் தேதி நான் அலகாபாத் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியை சமாஜ்வாடிக் கட்சியே ரத்து செய்து விட்டது.
எனவே அன்றைய தினமும் நான் செல்லப் போவதில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், மீண்டும் ஜெயலலிதா உ.பி. பயணம் ரத்து என்று செய்தி வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
சமாஜ்வாடிக் கட்சி வேறு தேதியில் என்னை அழைத்தால் நிச்சயம் நான் பிரசாரத்திற்குப் போவேன் என்றார் ஜெயலலிதா.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications