நாராயணமூர்த்தி ஜனாதிபதியாகலாம்: கலாம்
மைசூர்:இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் குளோபல் கல்வி மையத்தில் மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர் மைசூர் வந்திருந்தார்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி கலாமை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது மாணவர்களில் ஒருவர் கலாமிடம், அடுத்த குடியரசுத் தலைவராக நாராயணமூர்த்தி வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு கலாம், மிகவும் அருமையாக இருக்கும் என்றார் கலாம்.
பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணமூர்த்தி பேசுகையில், அடுத்த குடியரசுத் தலைவராகவும் அப்துல் கலாம்தான் வர வேண்டும். அவர் இளைஞர்களின் மனதில் நிறைந்துள்ளார்.
அவரே மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும். எனக்கு அப்பதவிக்கு வரும் ஆர்வம் இல்லை. எந்தக் கட்சியும் என்னை இதுதொடர்பாக அணுகவில்லை.
காவிரி-கர்நாடகத்திற்குக் கண்டனம்:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் பந்த், கடை அடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களை நடத்துவது தேவையற்றது, கண்டனத்துக்குரியது. இதனால் எங்களுக்கும், மாநில அரசுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்.
எனது நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் மூட நான் விரும்பவில்லை. ஆனால் பந்த் தினத்தன்று எங்களது நிறுவனத்தை மூட வேண்டியதாயிற்று என்றார் மூர்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications