ஜி.கே.மணிக்கு திடீர் நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்.
ஈரோடு, சத்தியமங்கலம் சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் மாவட்ட சிறுபான்மையினர் மாநாடு நடந்தது.
இதில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தான் தங்கியிருந்த அரசினர் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஈசிஜி எடுக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் மணி மீண்டும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி ஓய்வெடுத்தார். இரவில் ரயில் மூலம் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications