ஆரம்பிச்சிருச்சுய்யா, வதந்தி ஆரம்பிச்சிருச்சுய்யா!
வேலூர்:தமிழ்நாட்டை அவ்வப்போது வினோதமான வதந்தி கிளம்பி மக்களைக் கலக்கும். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான வதந்தி கிளம்பி மக்களைக் குழப்ப ஆரம்பித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் ஒரு வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் உள்ள ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கு பச்சை வண்ண சேலை கொடுத்தால் ஆயுள் கெட்டியாகும் என கிளம்பிய அந்த வதந்தியால் பச்சை கலர் புடவைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, விற்காத சேலைகள் கூட விற்றுத் தீர்ந்தன.
அதேபோல சமீபத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த தினம் சரியில்லை என்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒரு புரளி கிளம்பியது. இதையடுத்து வீடுகளில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளைப் பொருத்தி வைத்தனர் பெண்கள்.
இந்த நிலையில், தற்போது தமிழ்ப் புத்தாண்டை வைத்து ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டான சர்வஜித், சனிக்கிழமை பிறப்பதால், குடும்பத்தின் தலைமகனுக்கு ஆபத்து என்பதுதான் இந்த வதந்தி.
வேலூரில்தான் இந்த வதந்த முதலில் கிளம்பியது. இதற்கு பரிகாரத்தையும் புரளி கிளப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வீட்டில் உள்ள மூத்த மகனை ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய், தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி, 3 முறை அவரைச் சுற்றி திருஷ்டி கழித்தால் பிரச்சினை சரியாகி விடுமாம்.
இதையடுத்து நேற்று மாலை முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில்கள் அனைத்தும் படு பிசியாக மாறியுள்ளன. வீட்டில் உள்ள தலைமகன்கள் அனைவரையும் அவர்களது அம்மாக்கள் அழைத்து வந்து திருஷ்டி சுற்றிப் பரிகாரம் செய்து பத்திரமாக அழைத்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி மகன்களை பிள்ளையார் விக்கிரகம் முன்பு நிறுத்தி, அசையாதப்பா, அப்படியே நில்லு என்று கூறி தலை முதல் கால் வரை பெரிய சுற்றாக 3 முறை சுற்றி தேங்காயை உடைத்துப் பெண்கள் பரிகாரம் செய்கின்றனர்.
தலைமகன்களுன், தாய்மார்கள் பிள்ளையார் கோவில்களுக்குப் படையெடுத்து வருவதால் அப்பகுதியில் உள்ள தேங்காய் வியாபாரிகளுக்கு அடித்தது லக்கி பிரைஸ். கிடுகிடுவென தேங்காய் விலையை உயர்த்தி அமோகமாக காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications