ஆட்டோவில் மாணவர்கள் கடத்தல்:விரட்டிப் பிடித்து மீட்ட மக்கள்
நாகர்கோவில்:நாகர்கோவிலில் 7 மாணவ, மாணவிகளை ஆட்டோவில் கடத்திய டிரைவரை, பொதுமக்கள் ஒன்று திரண்டு விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவிலில், உள்ள தேரைக்கால் என்ற பகுதியில் 7 மாணவ, மாணவியர் பள்ளி செல்வதற்காக பள்ளிப் பேருந்துக்குக் காத்திருந்தனர். ஆனால் வழக்கமான நேரத்தில் பேருந்து வரவில்லை.
இந்த சமயத்தில் ஒரு ஆட்டோ வேகமாக வந்து நின்றது. பள்ளிப் பேருந்து பழுதடைந்து விட்டது. இந்த ஆட்டோவில் அழைத்து வருமாறு உங்களது பள்ளிக்கூடத்தில்தான் கூறினார்கள். வந்து ஏறிக் கொள்ளுங்கள் என்று ஆட்டோ டிரைவர் கூறவே, மாணவ, மாணவியர்கள் அதில் ஏறிக் கொண்டனர்.
ஆனால் பள்ளிக்குச் செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோ சென்றது. இதனால் பயந்து போன மாணவ, மாணவியர் கத்திக் கூச்சல் போட்டனர்.
இதைப் பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள், கிடைத்த வாகனங்களில் ஏறி ஆட்டோவை துரத்தினர். சில விநாடி துரத்தலுக்குப் பின்னர் ஆட்டோ மடக்கி நிறுத்தப்பட்டது.
டிரைவரை சரமாரியாக அடித்த பொதுமக்கள் அவரை ஆட்டோவுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எதற்காக அவர் மாணவர்களை கடத்த முயன்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications