அம்மா வாங்காதீங்க, அக்கா வாங்காதீங்க!
சென்னை:ரிலையன்ஸ் காய்கறிக் கடைக்கு காய்கறி வாங்க வந்த பெண்களின் காலில் விழுந்து இங்கு காய்கறிகளை வாங்காதீர்கள், சிறு வணிகர்களின் கடைகளுக்கே போய் வாங்குங்கள் என்று கோரி பாமகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்து வரும் காய்கறிக் கடைகளுக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் இந்தக் கடைகளில் போய் காய்கறி வாங்க வேண்டாம் என்று கோரி பொதுமக்களுக்கு பிட் நோட்டீஸ் கொடுத்துப் போராட்டம் நடத்தினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இந்த நிலையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடைகள் முன்பு நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
காய்கறி வாங்க வந்த பெண்களின் காலில் விழுந்து, தயவு செய்து இங்கு வாங்காதீர்கள் என்று பாமகவினர் கேட்டுக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
தி.நகரில் உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு நடந்த போராட்டத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
பாமகவினரின் இந்த நூதனப் போராட்டத்தால் பெண்கள் குழப்பமடைந்தனர். சில பெண்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். ஆனால் பலர், பாமகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் காலில் விழுந்ததையும் மீறி ரிலையன்ஸ் கடைக்குள் சென்று காய்கறிகளை வாங்கி விட்டுச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications