தெ.ஆப்பிரிக்கா அபாரம்: அரையிறுதி வாய்ப்பைஇழந்தது மேற்கிந்திய தீவு அணி
கிரனடா:மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
டாஸ் வென்ற மேற்கிந்திய அணி தென் ஆப்பிர்காவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித்தும், டிவிலியர்ஸ்சும் களம் இறங்கினர்.
ஆனால் ஸ்மித் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் டிவிலியர்ஸ்சும், காலிஸ்சும் ஜோடி சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை அடித்து நெறுக்கினர்.
சிறப்பாக விளையாடிய காலிஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் அதிரடியாக ஆடி ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். இவர் அதிரடியாக அடி 145 ரன்கள் குவித்தார்.
இவர்கள் ஆட்டமிழந்த பின் கிப்ஸ்சும், பவுச்சரும் இணைந்து மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை மேலும் பதம் பார்த்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஒவர் முடிவில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன் குவித்தது. கிப்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்கமால் 61 ரன் குவித்தார். பவுச்சர் 52 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 357 என்ற மெக இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே சந்தர்பால் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கெய்ல் 32 ரன்னும், ஸ்மித் 33 ரன்னும், லாரா 21 ரன்னும், பிராவே 6 ரன்னும், போலர்ட் 10 ரன்னும் எடுத்து விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் சர்வான் மட்டும் நிலைத்து அடி 92 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக விளையாடிய பாவல் 48 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
ஆட்டத்தின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த தோல்வி மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications