மண்டபம் அகதி குழந்தையிடம் திருடிய பெண் போலீஸ்துப்பாக்கியையும் தொலைத்தார்-4 பேர் சஸ்பெண்ட்!
ராமநாதபுரம்:மண்டபம் அகதிகள் முகாமில் பணியில் இருந்த 4 பெண் போலீசார் தூக்கத்தில் தங்களது துப்பாக்கிகளை தொலைத்ததால் நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் ஆண், பெண்களுக்கென்று தனித்தனியாக 2 முகாம்கள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3ம் தேதி பெண்கள் முகாமில் பணியில் ஈடுபட்டு இருந்த வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகியோர் வைத்திருந்த இரு .303 ரக துப்பாக்கிகள் தொலைந்து போயின.
இதையடுத்து ராமேஸ்வரம் போலீசார் மண்டபம் முகாமில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் அந்த துப்பாக்கிகள் கிடந்தது. துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார் அகதிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பெண் போலீஸ் வெங்கடேஸ்வரி முகாமில் தங்கியிருக்கும் ரதிகலா என்பவரின் குழந்தை அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி இருக்கிறார். இதை அக் குழந்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளது.
இதையடுத்து வெங்கடேஸ்வரி நகைகளை கொடுத்து விடுவதாகவும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வெங்கடஸ்வரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
மேலும் பணியின்போது 4 பேரும் தூங்கிய நேரத்தில் யாரோ ஒருவர் இவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சென்று மரத்தடியில் போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.
அகதிகளை பெண் போலீசார் மிரட்டியதால் ஆத்திரமடைந்த சிலர் இதை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த பெண் போலீசார் வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகிய 4 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications