சென்னையை மேம்படுத்த ரூ.45,000 கோடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகரை உலக தரம் மிக்க நகரமாக மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து சில முக்கிய குறிப்புகளை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்,
- சென்னை மாநகரை உலகதரம் வாய்ந்த நகரமாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
- மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற சீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகர மேம்பாட்டு திட்டம் ரூ. 45,000 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்ட மதிப்பீடு ரூ. 3,400 கோடியாகும். இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
- 8 இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்கு ஒரு உயர்மட்ட பாலம், 3 மேம்பாலங்கள், 4 சுரங்க பாதைகளும், கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- புனித ஜார்ஜ் கோட்டையில் முன்புறம் பகுதி, மெரீனா கடற்கரை, எலியர்ட்ஸ் கடற்கரை பகுதி ஆகியவற்றை அழகுப்படுத்தி ரூ. 25 கோடி செலவிடப்படும்.
- நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மண் சாலைள் மற்றும் கல் ரோடுகளை தார் சாலையாகவும், சிமென்டு சாலைகளாகவும் அடுத்த 4 ஆண்டுகளில் மாற்ற திட்டமிடப்படுள்ளது.
- நகராட்சி, மாநகராட்சிகளில் புதிதாக வரன்முறை செய்யப்பட்ட மனை பிரிவுகளில் 2007, 2008ம் ஆண்டுகளில் தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்படும்.
- அரசின் வரி வருவாயில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் பங்கினை 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
- சென்னை புறநகரில் 5 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 22 ஊராட்சிகள், ஒரு கண்டோண்ட்மன்ட் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளன.
- நடப்பு ஆண்டில் 60 நகரங்களுக்கு ரூ. 389 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணிகள் நிறைவேற்றி பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications