நாகை: நள்ளிரவில் தேர்தல் அதிகாரி கடத்தல்
நாகை:நாகையில் நகரசபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வந்த தேர்தல் அதிகாரி நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார்.
நாகை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த தங்கப்பிள்ளை வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது, கவுன்சிலர்களது வாக்குகளை கமிஷ்னர் விஜயகுமாரே பதிவு செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிைலயில் தங்கப்பிள்ளை தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.தேர்தல் அதிகாரியாக நகராட்சி செயற்பொறியாளர் மாரியப்பன் அறிவிக்கப்பட்டார்.
இன்று இந்த தேர்தல் நடக்க இருந்தது. அனைத்து கவுன்சிலர்களும், அதிகாரிகளும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்ட நிலையில் தேர்தல் அதிகாரியான மாரியப்பன் மட்டும் வரவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, லாட்ஜில் தங்கியிருந்த அவரை நேற்றிரவு சிலர் அழைத்து சென்றதாகவும், அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை எனவும் தெரியவந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications