சின்னசேலத்தில் கள்ள துப்பாக்கி தயாரிப்பு-3 பேர் கைது
சின்னசேலம்: கள்ளத் துப்பாக்கி தயாரித்து விற்க வந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் சின்னசேலத்தை சேர்ந்த சாமிதுரை(30)என்பவர், வெள்ளி(50), ராமசாமி(35) ஆகியோரின் உதவியுடன் லேத் பட்டறைகளில் துப்பாக்கி பாகங்களை தயாரித்து விற்பதாக கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதனை கண்டறிய கியூ பிராஞ்ச் போலீஸார், விவசாயிகள் போல் மாறு வேடமிட்டு அவர்களிடம் சென்றனர். தாங்கள் பாண்டிசேரியில் இருந்து வருவதாகவும், தங்கள் நிலத்தை பாதுகாக்கா துப்பாக்கி தேவைப்படுகிறது என அவர்களிடம் கூறி, ரூ. 1000 முன் பணமாக கொடுத்தனர்.
அதற்கு, தானே நேரில் துப்பாக்கி கொண்டு வந்து தருவதாக சாமிதுரை கூறினார்.
இதன்படி துப்பாக்கி தயாரித்து சின்னசேலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்தவர்களை, தயாராக காத்திருந்த கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ராஜ்பாபு தலைமையிலான படையினர் மடக்கி பிடித்தனர்.
இவர்களை பற்றி அவர்கள் கிராமத்தில் விசாரித்தபோது,
மலைவாழ் மக்களுக்கு தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடைய துப்பாக்கிகளை ரிப்பேர் செய்து கொடுத்துள்ளார். வெல்டிங் பட்டறை வைத்திருக்கும் வெள்ளி, ராமசாமி ஆகியோர் தனக்கு உதவியாக அமர்த்தி அவர்கள் மூலம் துப்பாக்கி பாகங்களை தனித்தனியே உருவாக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து துப்பாக்கி ரூ. 2,500 முதல் ரூ.10,000 வரை கோவை, சேலம் போன்ற பகுதிகளில் விற்று வந்துள்ளார்.
இவர் தீவிரவாத குழுக்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்தாரா, ஆயுத கடத்தல் கும்பலுடன் தொடர்பு உண்டா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications