ரூ.396 கோடியில் 15,869 வீடுகள்-ஸ்டாலின்
சென்னை:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை கல்வியும், வங்கிகளில் கடன் பெற வசதியாக அடையாள அட்டைகளும் வழங்கப்படும் என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்,
1989ல் திமுக அரசினால் தொடங்கப்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளை எளிதாக அணுக அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படும். இந்த குழுக்கிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டம் மூலம் ரூ.396 கோடியில் 15,869 வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளுக்கு ரூ.40,000 செலவில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
கைவினைஞர்கள் மேம்பாட்டிற்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டு, கைவினைஞர் கிராமம் ஒன்றும், மாமல்லபுரத்தில் சிற்ப பூங்கா ஒன்றும் நிறுவப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிலுள்ள 3,820 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை மீது விதிக்கப்படும் அபராத வரி 12 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகள் அமைப்புகளுக்கு யூனிட் மின்சாரம் ரூ.3.40 செலுத்துவது இனி ரூ.3 என குறைக்கப்பட்டுள்ளது.
2,534 கிராம ஊராட்சி ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 507 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
ஊரக பகுதி இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் அமைத்து பராமரிப்பு செலவை அரசு ஏற்றுகொள்ளும்.
பழுந்தடைந்துள்ள ஊராட்சி சாலைகளை ரூ.103 கோடியே 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications