ஜப்பானில் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:ஜப்பானில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.
டோக்கியோவுக்கு 300 கி.மீ மேற்கே ஜப்பானின் மத்திய, மேற்குப் பகுதிகளை இன்று காலை நில நடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 5.3 என்ற அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கெமியமா என்ற இடத்தில் வீடு இடிந்து 2 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தையடுத்து அதிவேக புல்லட் ரயில் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications