சென்னை விமான நிலையத்தில் விமானிகள் அடிதடி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் 2 விமானிகள் கிண்டலடித்து பேசி கொண்டிருந்த போது அது பிரச்சனையாகி இருவரும் அடித்துக் கொண்டு உருண்டனர்.
பாரமெளண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளான விஜய் பார்மர்(57) மற்றும் அமெரிக்காவின் ஜோசப் கிராண்ட் பாக்ட்(55), இருவரும் நேற்று காலை பணிக்கு வந்தபோது கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜோசப் விஜய்யை பார்த்து, நீ விமான ஓட்ட வைத்திருக்கும் லைசென்ஸ் உண்மையானதா எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே சண்டை முற்றியது.
விஜய்யின் கன்னத்தில் ஜோசப் அறைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இதைப் பார்த்த விமான ஊழியர்கள், பயணிகள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு இருவரும் பணிக்கு திரும்பினர்.
விஜய் மதுரை விமானத்தை இயக்கிச் சென்றார். ஜோசப் ஹைதராபாத் விமானத்தை இயக்கிச் சென்றார்.
மதுரையில் இருந்து சென்னை திரும்பிய விஜய் மருத்துவமனைக்கு சென்று தன்னை ஒருவர் அடித்துவிட்டதாக கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கான மருத்துவ சான்றிதழும் வாங்கி கொண்டார்.
பின்னர் அந்த சான்றிதழுடன் விமான நிலைய போலீஸாரிடம் சென்று தன்னை ஜோசப் அடித்துவிட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து ஜோசப் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் விமானிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பல விமான நிறுவனங்களும் வெளிநாட்டினரை விமானிகளாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?











Click it and Unblock the Notifications