பெண் அதிகாரிகளின் அந்தரங்க தகவல்கள்:இனி அவசியம் இல்லை - மத்திய அரசு
டெல்லி:மாதவிடாய் உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய பணியாளர் துறை மார்ச் 14ம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி, பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வருடாந்திர பணி அறிக்கையில், தாங்கள் கடைசியாக கர்ப்பம் தரித்தது எப்போது, கடைசியாக மாதவிடாய் வந்தது எப்போது, மார்பகப் புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்பது உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பெண் அதிகாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாதவிடாய் என்பது பெண்களின் தனிப்பட்ட விஷயம், இயற்கையான ஒரு நிகழ்வு. இதை கேட்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல், அந்தரங்கத்தில் தலையிடும் அநாகரீகச் செயல் என கண்டனங்கள் எழுந்தன.
மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரியும், இந்த உத்தரவு தேவையில்லாதது, தவறானது, இதை திரும்பப் பெற வேண்டும் என கோரியிருந்தார். அதேபோல தேசிய மகளிர் ஆணையத் தலைவி கிரிஜா வியாஸும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அரசின் இந்த உத்தரவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்தே தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது மத்திய அரசு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications