போலீஸுக்கு பனை தொப்பி-குமரியார் யோசனை
சென்னை:போக்குவரத்து போலீஸாருக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட தொப்பியை வழங்கலாம் என தமிழக பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் யோசனை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் காகிதக் கூழால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
மரங்களை வெட்டித் தூளாக்கி கூழாக்கிச் செய்யப்படுவதே இந்தத் தொப்பி. இதனை அணிவதால் தலைக்குள் சூரிய ஒளி புகாது. இதனால் தலை வியர்த்து, காற்று புகாமல் மூளை பாதிப்புக்கு ஆளாகும். தலை முடி கொட்டும்.
ஆனால் இந்தத் தொப்பிகளுக்குப் பதில், பனை குருத்தோலையால், கிராமப்புறப் பெண்களும், தொண்டு நிறுவனங்களும் செய்யும் பனை ஓலைத் தொப்பியை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் சிறிய துவாரங்கள் மூலம் தலைக்கு காற்று தாராளமாக புகும்.
இந்த வகை தொப்பிகளை அணிவது குறித்து காவல்துறை சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன்.
பனை ஓலைத் தொப்பி என்பது உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன் உள்ளிட்ட பல படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருப்பாரே பிரமாண்ட வட்டத் தொப்பி, அதுதான்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications