இலங்கையை வாரிச் சுருட்டிய ஆஸ்திரேலியா
செயின்ட் ஜார்ஜ்:இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றிக் கொடியை மேலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது ஆஸ்திரேலியா.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு போட்டியிலும் தோற்காத அணியாக கலக்கி வருகிறது ஆஸ்திரேலியா. வலுவான ஆஸ்திரேலியாவும், கோப்பைக் கனவுடன் உறுதியாக நடைபோட்டு வரும் இலங்கையும் நேற்று கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜ் நகரில் சந்தித்தன.
![]() |
முக்கியப் பந்துவீச்சாளர்களான சமிந்தா வாஸ், முரளீதரன், லசித் மலிங்கா ஆகியோர் இல்லாத நிலையில் பலவீனமான சூழ்நிலையில் இலங்கை களம் இறங்கியது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ரன் எடுக்க ஆரம்பித்தது இலங்கை.
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பிரேக்கன் சிறப்பாக பந்துவீசி அதிரடி மன்னன் ஜெயசூர்யாவையும், உபுல் தரங்காவையும் வேகமாக அவுட் செய்து இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தார்.
![]() |
ஆனால் ஜெயவர்த்தனேவும், சமர சில்வாவும் இணைந்து நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். இருவரின் ஆட்டத்தால் இலங்கையின் நிலை ஓரளவு சரியானது.
சிறப்பாக ஆடிய சமர சில்வா 64 ரன்களை எடுத்தார். ஜெயவர்த்தனே 72 ரன்களைக் குவித்தார். இருவரும் பிரிந்த பின்னரே இலங்கை மீண்டும் சரிவைச் சந்தித்தது.
இறுதியில், 49.4 ஓவர்களிலேயே இலங்கை ஆல் அவுட் ஆகி 226 ரன்களை மட்டுமே எடுத்தது.
![]() |
எளிதான இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். மாத்யூ ஹைடன் அபாரமாக ஆடி 41 ரன்களைக் குவித்தார். கில் கிறைஸ்ட் 30 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரிக்கி பான்டிங் சிறப்பாக ஆடி 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைப் போலவே ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
42.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 8 போட்டிகளில விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அத்தனையிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications