இஸ்கான் மீது பக்தர்கள் சங்கம் சரமாரி புகார்
பெங்களூர்:கர்நாடக மாநிலத்தில் இஸ்கான் அமைப்பு நடத்தி வரும் அக்ஷய பாத்திரா மதிய உணவு திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்திருப்பதாக இஸ்கான் பக்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றழைக்கப்படும் இஸ்கான் அமைப்பு உலகம் முழுவதும் பல சமூகப் பணிகள் ஆற்றி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு.
இந்த அமைப்பு பெங்களூரில் கர்நாடக அரசின் உதவியுடன் அம் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் அக்ஷய பாத்திரம் என்ற மதிய இலவச உணவுத் திட்டத்தை நடத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை இஸ்கான் வழங்கி வருகிறது.
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த சமீபத்தில் இஸ்கான் அமைப்பு விருப்பம் தெரிவித்திருந்தது. இந் நிலையில், அக்ஷய பாத்திரத் திட்டத்தில் ெபருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பெங்களூர் இஸ்கான் பக்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சத்யகோபிநாத் தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்ஷய பாத்திரத் திட்டத்தில் பெருமளவில் நிதி முறைகேடுள் நடக்கின்றன.
இஸ்கான் அமைப்பின் தலைவரான மது பண்டிட் தாஸ் இந்தத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தபோதே, அவைெயல்லாம் வேண்டாம் என்று பக்தர்கள் சார்பில் கூறினோம்.
ஆனால் அப்படிக் கூறிய எங்களை மது பண்டிட் தாஸ் இஸ்கான் அமைப்பிலிருந்து நீக்கி விட்டார். நாங்கள் தற்ேபாது மது பண்டிட் தாஸால் பலியாக்கப்பட்டவர்கள்.
இஸ்கான் பெங்களூர் அமைப்பின் உண்மையான பக்தர்கள் நாங்கள்தான். ஆனால் மது பண்டிட் தாஸின் போக்கால் நாங்கள் இப்ேபாது அங்கு ேபாக முடியவில்லை.
ரியல் எஸ்டேட், சொத்துக் குவிப்பு ேபான்றவற்றில் மது பண்டிட் தாஸ் ஈடுபட்டு வருகிறார். அவர் செய்த தவறுகளுக்கு நாங்கள் பலியாகி விட்ேடாம் என்றார் கோபிநாத் தாஸ்.
மது பண்டிட் தாஸ் கேரளத்தை சேர்ந்தவர் ஆவார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications