லோகநாதன் குடும்பத்துக்கு 1 மணி நேரத்தில் பாஸ்போர்ட்-பயண செலவை தமிழக அரசு ஏற்றது
சென்னைஅமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் பெற்ேறார் உள்ளிட்ட நான்கு பேருக்கு இன்று ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து ெகாள்ள அவரது பெற்ேறார் உள்பட 9 பேர் இன்று இரவு அமெரிக்கா செல்கின்றனர். அவர்களுக்கான பயணச் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.இறுதிச் சடங்கில் கலந்து ெகாள்ள லோகநாதனின் பெற்ேறார் வாசுதேவன், கண்ணம்மாள் உள்ளிட்ட 9 பேர் அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் வாசுதேவன், கண்ணம்மாள், சகோதரர் செங்குட்டுவன், அண்ணி செந்தமிழ்ச் செல்வி ஆகிேயாருக்கு பாஸ்போர்ட் இல்லை.
இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் இன்று காலை சென்ைனக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு அதிகாரிகள் மத்திய வெளியுறவுத்துறையுடன் பேசி செய்து தந்தனர். மேலும் அெமரிக்க தூதரகத்தில் பேசி உடனடி விசாவுக்கான ஏற்பாடும் செய்தனர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு செய்த இந்த உதவிக்கு லோகநாதன் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து சென்னை மண்டல பாஸ்ேபார்ட் அதிகாரி சுமதி கூறுகையில், பாஸ்போர்ட் இல்லாத நான்கு பேருக்கும் ஒரு மணி நேரத்திற்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது என்றார்.
இன்று இரவு 9.30 மணிக்கு அவர்கள் 9 பேரும் ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்கா செல்கின்றனர்.
பயணச் செலவை அரசே ஏற்றது:
இதற்கிடையே ேலாகநாதன் மறைவு குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துப் ேபசினர். அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், லோகநாதன் மறைவுச் செய்தி கேட்டதுமே, முதல்வர் கருணாநிதி தனி அதிகாரி ஒருவரை நியமித்து லோகநாதன் உறவினர்கள் அமெரிக்கா சென்று வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார்.
லோகநாதன் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட், விசா போன்றவற்றை ஏற்பாடு செய்யும் பணியையுயம் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பில் அந்த அதிகாரியே மேற்ெகாண்டார்.
உறுப்பினர்களின் ேகாரிக்ைகை ஏற்று, லோகநாதன் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் அமெரிக்கா சென்று திரும்புவதற்கான செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுள்ளது என்றார்.
முன்னதாக லோகநாதனின் உடலை ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையத்திற்குக் கொண்டு வர அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். இருப்பினும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் உடலை பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என லோகநாதன் கூறியுள்ளதாக அவரது மனைவி உஷா தெரிவித்ததால், அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.
லோகநாதன், உஷா தம்பதியினருக்கு உமா, அபிராமி என இரு மகள்கள். 21 வயதாகும் உமா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், பயோ மெடிக்கல் என்ஜீனியரிங் படித்து வருகிறார். அபிராமி, பிளாக்ஸ்ப்பெர்க் நகரில் பள்ளிக் கூடத்தில் படித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு உமாவின் படிப்பு முடிகிறது. அதன் பின்னர் இந்தியாவுக்கு வந்து செட்டிலாகும் எண்ணத்தில் இருந்தாராம் லோகநாதன்.
லோகநாதன் படிப்பில் மட்டுமல்ல செஸ், குவிஸ் ஆகியவற்றிலும் மிகச் சிறந்து விளங்கியுள்ளார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரியிலேயே மிகச் சிறந்த மாணவராக திகழ்நதுள்ளார்.
படிப்பு, செஸ், குவிஸ் ஆகியவற்றில் பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையாக இருந்துள்ளார் லோகநாதன். ஆனால் அவரது அந்த ஆசையே கடைசி ஆசையாக, நிராசையாக போய் விட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications