லோகநாதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
டெல்லி:அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான பேராசிரியர் ஜி.வி.லோகநாதனின் குடும்பத்தாருக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், 51 வயதாகும் லோகநாதன் விருது பெற்ற பேராசிரியர் ஆவார். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியற்காக பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் அவர் வென்றுள்ளார்.
![]() |
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் டாப் 10 ஆசிரியர்கள் வரிசையில் அவரும் இடம் பெற்றவர்.
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது சுடப்பட்டு அவர் இறந்தது பெரும் வேதனையைத் தருகிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது.
லோகநாதனின் மனைவிக்கும், அவரது இரு குழந்தைகளுக்கும் என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அனில் குப்தா மற்றும் கிஷன் வர்மா ஆகியோர் நேற்று இரவு விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர்.
அங்கு பெரும் பீதியில் உறைந்துள்ள 600க்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், பேராசிரியர் லோகநாதனின் மனைவி உஷாவையும் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தியத் தூதர் ரோனன் சென்னின் அனுதாபச் செய்தியையும் உஷாவிடம் அவர்கள் வழங்கினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!













Click it and Unblock the Notifications