வென்றது தெ.ஆப்பிரிக்கா-இங்கிலாந்து வெளியேற்றம்
பிரிட்ஜ்டவுன்:முக்கியமான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பைப் போட்டியலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில், 4வது அணி யார் என்பதில் குழப்பம் நிலவியது.
![]() |
தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் இரு அணிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியை சந்தித்தன.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீர்ரகள் சடசடவென சரிந்தனர்.
இயான் பெல் 7 ரன்களும், கேப்டன் வாகன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டிராஸ் மட்டும் சற்று சமாளித்து ஆடி 47 ரன்கள் சேர்த்தார்.
![]() |
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெவின் பீட்டர்சன் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். காலிங்வுட் 30 ரன்கள் சேர்த்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி போபாரா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர்களைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடாததால், இங்கிலாந்து 48 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ரன்களில் சுருண்டு போனது.
![]() |
பின்னர் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. கேப்டன் ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினார். 58 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 89 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக டிவில்லியர்ஸும் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார்.
19.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது தென் ஆப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications