எம்எல்ஏ மகளை ஒப்படைக்கக் கோரி காதலர் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தனது காதலியான சேலம் 1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரவிச்சந்திரனின் மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ஏவின் முன்னாள் உதவியாளர் சிவக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேலம் 1வது தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரவிச்சந்திரனிடம் உதவியாளராக இருந்தவர் சிவக்குமார். இவருக்கும், எம்.எல்.ஏவின் மகள் கலைவாணிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

17 வயதாகும் கலைவாணியும், சிவக்குமாரும் கடந்த நவம்பர் மாதம் திடீரென வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.

அதன்பேரில் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உயர்நீதின்றம் உத்தரவிட்டது. போலீஸார் தீவிர வேட்டை நடத்தி இருவரையும் கண்டுபிடித்து கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர்.

அங்கு தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கலைவாணி தெரிவித்தார். இதையடுத்து அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த நிலையில் சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நான் ஏற்கனவே கலைவாணியை மணந்து விட்டேன். அவர் என்னைத்தான் விரும்புகிறார். வருகிற 28ம் தேதியுடன் கலைவாணிக்கு 18 வயது பூர்த்தியாகிறது. எனவே அவரை என்னுடன் ஒப்படைக்க அவரது தந்தைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய பெஞ்ச், வருகிற 24ம் தேதி காலை கலைவாணியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+