அட்சய திரிதியை: நகைக் கடைகளில் விழாக்கோலம்
சென்னை:அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் திருவிழாக் கூட்டம் காணப்படுகிறது. மக்கள் நகை வாங்க அலைமோதுகின்றனர்.
இன்று அட்சயதிரிதியை தினமாகும். இந்த நாளில் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி ஒரு பழக்கம் தமிழகத்தில் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சிய திரிதியையன்று நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு அட்சிய திரிதியை தினம் 2 நாட்கள் நீடிக்கிறது. இன்று முதல் நாளை காலை 10 மணி வரை நகை வாங்கலாம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இன்று காலை முதலே நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
நகைக் கடைகள் அதிகம் உள்ள தி.நகரில்தான் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தி.நகரில் மட்டும் இன்றும் நாளையும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் நகை வாங்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தி.நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகைக் கடைகளில் மாறு வேடத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போல இந்த முறையும் செய்யப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள பிரகாசம் சாலை, உஸ்மான் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications