போலி மனைவியுடன் கைதான பாஜக எம்பி:பணம் பெற்றுக் கொண்டு பெண்களைக் கடத்துபவர்!!
டெல்லி:மனைவியின் பாஸ்போர்ட் மூலம் வேறு ஒரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபு பாய் கத்தாரா, பணம் பெற்றுக் கொண்டு பெண்களை வெளிநாடுகளுக்கு கொண்டு போய் விடும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தைச் சேரந்த லோக்சபா உறுப்பினர் பாபுபாய் கத்தாரா. இவர் நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்தார். அவருடன் ஒரு பெண்மணியும், ஒரு சிறுவனும் உடன் வந்தனர்.
![]() |
இருவரையும் மனைவி, மகன் என்று கூறிக் கொண்டு விமானம் ஏற முயன்றார் பாபுபாய். ஆனால் அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனையிட்டனர். அதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் பரம்ஜித் எனத் தெரிய வந்தது.
![]() |
ஆனால் பாபுபாயின் நிஜமான மனைவி சாதார பென்னின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் பயணம் செய்ய முயன்றுள்ளார். அதேபோல பாபுபாயுடன் வந்த சிறுவனும் அவரது மகன் அல்ல, மாறாக அமர்ஜீத் என்ற சிறுவன் ஆவான்.
இவர்களை கனடாவுக்கு கொண்டு போய் விடுவதற்காக பரம்ஜித்திடம் ரூ. 30 லட்சமும், அமர்ஜீத்திடம் ரூ. 35 லட்சம் பணமும் பெற்றுள்ளார் பாபுபாய்.
இதுபோல பணம் பெற்றுக் கொண்டு ஆட்களை வெளிநாடுளுக்கு கடத்துவதை அவர் தொழில் போல செய்து கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு 5 பெண்களை இவர் இவ்வாறு கடத்தியுள்ளாராம்.
பாபுபாய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்














Click it and Unblock the Notifications