சென்னையில் டாக்டர் கொலை- முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பிரமுகரின் உறவினரான டாக்டர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளை குற்றவாளிள் திருடிக் கொன்று சென்றனர்.
தென் சென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் ஆர்.டி.சீதாபதியின் உறவினர் டாக்டர் ரமேஷ்சந்தர் (35). இவரது மனைவி தமிழரசி. கோட்டூர்புரத்தில் கிளினிக் வைத்துள்ளார். சென்னை மாநகராட்சி மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
![]() |
நேற்று இரவு பொன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்த தனது கிளினிக்கில் இருந்தார் டாக்டர் ரமேஷ்சந்தர். அப்போது இரவு 9.30 மணி இருக்கும்.
டாக்டரின் உதவியாளரான சோனியா (18) பாத்ரூம் சென்றிருந்தார். டாக்டர் மட்டும் அவரது அறையில் இருந்தார். அப்போது அறையில் ஏதோ சப்தம் கேட்பது போலத் தெரிந்ததால் பாத்ரூமிலிருந்து வெளியே வந்துள்ளார் சோனியா.
அங்கு டாக்டர் அவரது இருக்கையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போனார் சோனியா. அந்த அறையிலிருந்து முகமூடி அணிந்த இரண்டு பேர் சோனியாவைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினர்.
பின்னர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் சோனியா. விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், டாக்டர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இருப்பினும் இது நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு காரணத்திற்காக நடந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டாக்டர் ரமேஷ் சந்தரின் கிளினிக் ஒரு வணிக வளாகத்தில் உள்ளது. அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications