ஆசிரியர் பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்தவர் நதியா (19). சின்னசேலம் அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.
கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகி, மற்ற மாணவிகள் முன்பு நதியாவைத் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நதியா வீட்டிற்கு சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. நேற்று காலை அந்த பள்ளி வேன் மாணவிகளை ஏற்றி செல்ல வந்தபோது, வேனை மறித்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் அறிந்த கச்சிராப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் சமாதானம் அடையாத பொதுமக்கள் அன்று மாலை, பேருந்து நிலையம் அருகில் கிராம மக்கள் 1000 பேருடன் சேர்ந்து சாலை மறியலில் குதித்தனர்.
இதனால் சுமார் 3 மணிநேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் தாசில்தார் கிருஷ்ணசாமி ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் கலைந்து சென்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications