அணை கட்ட விட மாட்டோம்-துரைமுருகன்
சென்னை:இந் நிலையில் சட்டசபையில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.இதைத் தடுக்க வேண்டும் என்பதில் எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை.
சமீபத்தில் ஆந்திர முதலமைச்சரை சந்தித்த போது, அணை கட்டும் எண்ணம் இல்லை என்றும் அணை கட்டுவது என முடிவு எடுத்தால் அதுகுறித்த திட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் கூறினார். ஆனால் ஆந்திர அரசிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
ஆந்திர மாநில நீர்வள செயலாளரை தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தொடர்பு கொண்டு பேசியபோது, அறிக்கை அனுப்புவது குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால் ஆந்திர முதல்வர் அறிக்கை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.
தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை துரிதப்படுத்த அரசு முயன்று வருகிறது.
பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் சட்டநிபுணர்களை கலந்தாலோசித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் வனத்துறையின் அனுமதி கொடுக்கப்பட்டதா என வனத்துறை அமைச்சர் ராஜாவிடம் கேட்டதற்கு, அவ்வாறு எந்த அனுமதியும் பெறவில்லை என்றார்.
இதனால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி அவர்கள் நம்மிடம் சொன்னபிறகு நாம் ஒத்துக் கொண்டால்தான் அணை கட்டமுடியும்.
ஆந்திர மாநிலம் நமக்கு நட்பானதாக இருக்கிறது என்றாலும் முதல்வரின் அறிவுரைப்படி, தமிழகத்தின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றார் துரைமுருகன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications