சென்னை-பூட்டிய காருக்குள் 2 வாலிபர்கள் பிணம்
சென்னை:சென்னை அயனவாரத்தில் பூட்டிய காருக்குள் இரண்டு வாலிபர்கள் பிணமாகக் கிடந்தனர். காருக்குள் ஏற்பட்ட விஷ வாயுவில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அயனவாரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). ஆண்டர்சன் சாலையில் கார் பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்தி வருகிறார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு, நிறுவனத்தின் சாவியை மைத்துனர் மாதவனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
ஒர்க்ஷாப்பில் மாதவனும், அவரது நண்பர் ராமுவும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரவு வேலையை முடித்து விட்டு அங்கு இருந்த மாருதி காரை ஒர்க்ஷாப்பின் உள்பக்கம் நிறுத்தி அதில் ஏறிப் படுத்துக் கொண்டனர்.
இன்று காலை 10 மணிக்கு பெருமாள் ஒர்க்ஷாப்புக்கு வந்தார். அப்போது ஒர்க்ஷாப் பூட்டப்படாமல் வெறும் ஷட்டர் மட்டும் இறக்கி விடப்பட்டிருப்பதைப் பார்த்து பார்த்து திடுக்கிட்டார்.
உள்ளே சென்ற அவர் மாருதி காரின் கண்ணாடிகள் ஏற்றி விடப்பட்ட நிலையில் உள்ளே மாதவனும், ராமுவும் படுத்த நிலையில் இருப்பதைப் பார்த்தார்.
பதறிப் போன அவர் கார் கண்ணாடியைத் திறந்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்ததை அறிந்து அதிர்ந்தார். அந்தக் கார் ஏசி பொருத்தப்பட்டதாகும். எனவே கார் ஏசி இயந்திரத்திலிருந்து விஷ வாயு கசிந்து இருவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்த மாதவனுக்கு 8 மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்ததாம். அவரது சொந்த ஊர் திருவண்ணாமலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications