சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம்- டேக் ஆப் ஆகுமா?
சென்னை:சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் ஏற்க மறுத்து விட்டார்.
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு விமான நிலையத்தின் அருகே உள்ள 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக தருவதாக கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது.
இதற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை அரசு தேர்வு செய்தது. ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாற்று திட்டங்களை தமிழக அரசு தயாரித்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.
தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யமால் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என பல்வேறு அரசியில் கட்சிகளும், அமைப்புகளும் யோசனை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்காலிக தீர்வாக சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக ஒரு ஓடுபாதையை அமைக்க தமிழக அரசு 832 ஏக்கர் நிலத்தை கொடுப்பதாக அறிவித்தது.
இதற்கான விரிவான அறிக்கையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு தயாரித்த திட்டத்தை தமிழக அரசு அதிகாரிகள் விளக்கினர்.
ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் திட்டம் தெளிவாக இல்லை எனக் கூறி அத்திட்டத்தை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications