ஒரே குடும்பத்திலே 4 பேர் படுகொலை
களக்காடு (திருநெல்வேலி):நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கணவன், மனைவி, 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (37). இவரது மனைவி சண்முகத்தாய் (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நான்கு பேரும் களக்காடு அருகே கேரள பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இன்று காலை ஒரு மர்ம கும்பல் ஜெயகுமாரை சரமாரியாக வெட்டியது. அதைத் தடுத்த அவரது மனைவியையும் வெட்டினர். தப்பியோட முயன்ற அவர்களை விரட்டி சென்று தாக்கியதில், ஜெயக்குமாரும், சண்முகதாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் அவர்களுடைய மகள்களையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் இறந்து கிடந்த அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக விரைந்து வந்த போலீஸார் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications