8000 ஓட்டுநர்-நடத்துநர்கள் நியமனம்: நேரு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 8000 ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறுகையில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் 1 லிட்டருக்கு 5.4 கி.மீ தூரம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சீரான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் தான் இது சாத்தியமாகிறது. இதை விட வேகமாக இயக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
நெல்லையை தனிக் கோட்டமாக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். செலவை குறைக்கும் நோக்கத்தில்தான் 22 கோட்டங்கள் 7 கோட்டங்களாக குறைக்கப்பட்டன.
தற்போது நெல்லையில் முதுநிலை மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் கோட்டமாக இல்லாவிட்டாலும் பணிகள் விரைவாக நடக்கும்.
புதிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நியமனம் செய்ய தேர்வு நடந்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2630 பேருந்துகள் ஓடத் தொடங்கிவி்ட்டன.
இன்னும் 4 மாதத்தில் அனைத்து விரைவு பேருந்துகளும், புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டு விடும் என்றார் நேரு.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications