பெண் கடத்தல் பாஜக எம்பியின் பிஏ கைது
டெல்லி: பெண் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக எம்பி பாபுபாய் கதாராவின் உதவியாளரான ராஜீந்தர் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில பாஜக எம்பியான பாபுபாய் கதாரா குஜராத் மதக் கலவரத்திலும் தொடர்புடையவர். இவரது தன் மனைவி எனக் கூறி இன்னொரு பெண்ணை பணத்துக்காக கனடாவுக்கு கடத்த முயன்ற போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது இதுபோன்று போலி பாஸ்போர்ட் மூலம் பலரை பல வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
இந் நிலையில் அவருடைய செயலாளரான ராஜீந்தர் சிங்கையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவரும் தன் மனைவி மற்றும் மகன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இவருக்கு உதவியாக டிராவல்ஸ் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீஸ் குழு விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications