வெடிபொருள் கடத்தல் என பொய் புகார்:மீனவர் தலைவர் உள்பட 7 பேர் கைது
காயல்பட்டனம் (தூத்துக்குடி):தங்களது உத்தரவை மீறி கடலில் மீன் பிடிக்க வந்த பக்கத்து கிராம மீனவர்களின் படகில் வெடிபொருட்களை வைத்து விட்டு, இலங்கைக்கு வெடிபொருட்களைக் கடத்துவதாக கூறி பொய்யான புகார் கொடுத்த மீனவர் கிராம தலைவர் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் அருகே உள்ளது கொம்புத்துறை மீனவர் கிராமம். இந்தக் கிராமத்தின் ஊர் கமிட்டி ஆலோசகர் ஜான்சன் மரியநாயகன் என்பவர் போலீஸைத் தொடர்பு கொண்டு, கொம்புத்துறை கடற்கரையில் சில வெளிநபர்கள் நடமாட்டம் உள்ளது, ஆயுதங்கள் கடத்துவது போலத் தெரிவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு கடலுக்குள் செல்ல படகைத் தயார் செய்து கொண்டிருந்த ததேயுஸ், ஜெரோன் மற்றும் வினோத் ஆகியோரை தடுத்து நிறுத்தி, படகை சோதனையிட்டனர்.
படகில் இருந்த ஒரு பெட்டியை உடைத்துப் பார்த்தபோது அதில், இரும்பு பால்ரஸ் குண்டுகள், வெடிமருந்துப் ெபாருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்டவை இருந்தன.
ஆனால் இவை எப்படி எங்களது பெட்டிக்குள் வந்தன என்று தெரியவில்லை என மூன்று மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது கொம்புத்துறை கிராம எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் வேறு கிராமத்தினர் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என கொம்புத்துறை ஊர் கமிட்டி தடை போட்டுள்ளதாம். ஆனால் அதை மீறி மேற்கண்ட மூன்று மீனவர்களும் மீன் பிடிக்க வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் கமிட்டியினர் அவர்களை போலீஸாரிடம் மாட்ட வைக்க, அவர்களே வெடிபொருட்களை எடுத்து வந்து அந்தப் படகில் வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கொம்புத்துறை ஊர் கமிட்டி தலைவர் ஜோசப் ராஜ், துணைத் தலைவர் ஜெரோமியஸ், பொருளாளர் ஜெரால்டு, ஆலோசகர்கள் ஜான்சன் மரியநாயகம், ஜோசப் அந்தோணி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications