நாய் வளர்ப்பு: வீட்டு வசதி வாரிய உத்தரவுக்கு தடை
சென்னை:தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்போர் நாய்கள் வளர்க்க வீட்டு வசதி வாரியம் விதித்த தடைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை சாந்தி காலனியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் மதுரம். இவருக்கு கடந்த 3ம் தேதி ஒரு கடிதம் வந்தது.
வீட்டு வசதி வாரியம் அனுப்பியிருந்த அக்கடிதத்தில், வீட்டு வசதி வாரிய விதிமுறைகளுக்குப் புறம்பாக நீங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள். உடனடியாக அந்த நாயை வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுரம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நாய்கள் மனிதர்கள் இல்லை என்றாலும் கூட அவை செல்லப் பிராணிகள். நாய் போன்ற பிராணிகளின் நலனுக்காகத்தான் அரசு மிருக வதை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இப்போது வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை ஏற்று நான் நாயை வீட்டை விட்டு விரட்டி விட்டால் அது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் வாழ உரிமை உள்ளது. வீட்டு வசதி வாரியம் எனக்கு வீடு ஒதுக்கியபோது நாய் வளர்க்கக் கூடாது என்று கூறவில்லை. எனவே அரசின் கொள்கைக்கு விரோதமான இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி மோகன்ராம், வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்











Click it and Unblock the Notifications