ராமர் பாலத்தை இடித்த இன்னொரு கப்பலும் சேதம்?
சென்னை:ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட இன்னொரு கப்பலும் சேதமடைந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை சேது சமுத்திரத் திட்டக் கழக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தின் முதல் படியாக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கிரேன், சில மாதங்களுக்கு முன்பு ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது அந்த பிரமாண்ட கிரேன் சேதமடைந்து கடலில் மூழ்கியது.
இதனால் அப்பகுதியில் பாலத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் கடலை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. தற்போது கடலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பலும் அதில் பொருத்தப்பட்டிருந்த மண் அள்ளும் கிரேனும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் தற்போது மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதை சேது சமுத்திரத் திட்டக் கழக அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆதாம் பாலப் பகுதியில் வானிலை சரியில்லாத காரணத்தால்தான் மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தை உடைத்து மண்ணை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிரட்ஜருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் சேதமடைந்ததாக கூறப்படும் டிரெட்ஜர் சென்னை துறைமுகத்திற்கு பழுது நீக்குவதற்காக கொண்டு வரப்படுவதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஆனால் எரிபொருள் நிரப்புவதற்காகவே அந்த டிரட்ஜர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications