அமைச்சர் ஆண்டனியை குள்ளன் என்று கூறிய இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியை குள்ளன் என்று கூறிய கேரள இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஏ.கே.ஆண்டனி சமீபத்தில் ஆலப்புழாவுக்கு வந்திருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் என்பவரிடம் இன்னொரு காவல்துறை அதிகாரி காவல்துறை வயர்லெஸ்ஸில் பேசினார்.
அப்போது, எப்போது காவல் நிலையத்துக்குத் திரும்புகிறீர்கள் என்று அந்த அதிகாரி ஜீவானந்தத்திடம் கேட்டுள்ளார். அதற்கு ஜீவானந்தம், அந்தக் குள்ளன் (ஆண்டனி) போன பின்னர் வருகிறேன் என்றார்.
இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் சாதாரண பணியிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications