ஆஸ்திரேலியாவை அமுக்கப் போவது யாரு?
பிரிட்ஜ்டவுன்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் மட்டுமல்லாது, ெதாடர்ந்து அடிக்க ஆள் இல்லாத கிரிக்கெட் சண்டியராக அதகளப்படுத்த வரும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சதிராடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது.
இந்தியா போன்ற அணிகள் எல்லாம் கைப்புள்ள போல சிறுபிள்ளைத்தனமாக சவடால் விட்டு வரும் நிலையில், வில்லாதி வில்லனாக, வீராதி வீரனாக, மன்னாதி மன்னனாக கலக்கி வருகிறது ஆஸ்திரேலியா.பேட்டிங், பெளலிங், பீல்டிங் என மூன்று துறையிலும் இவர்களுக்கு இணை இப்போதைக்கு யாரும் இல்லை என்ற நிலை உள்ளது. எந்த அணியாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட வீரரராக இருந்தாலும் சரி, எந்த ஊர் மைதானாமாக இருந்தாலும் சரி, சவாலை அல்வா போல சந்தித்து அப்படியே அள்ளி விழுங்கி விடுகிறது ஆஸ்திரேலியா.
உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று யாராலும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. அது மட்டுமல்ல கடந்த உலகக் கோப்பைப் போட்டியையும் சேர்த்து தொடர்ந்து 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவுட் ஆகாத அணி என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹைடன் இந்த உலககோப்பை தொடரில் மட்டும் 3 சதங்களை அடித்து மொத்தம் 580 ரன்கள் குவித்து மகா ஃபார்மில் இருக்கிறார்.
உலககோப்பை தொடருக்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது ஆஸ்திரேலியா. அதற்கு முன்பு இங்கிலாந்திடம் அடி வாங்கியது. உடனே, எல்லோரும் ஆஸ்திரேலியா அவ்வளவுதான், கோப்பையை வாங்காது என்று கூறத் தொடங்கி விட்டனர்.
ஆனால் அவர்கள் இப்போது விளையாடி வரும் விதத்தைப் பார்த்தால், சும்மானாச்சுக்கும் அவுட் ஆகி உலகை ஏமாற்றியிருப்பார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. நியூசிலாந்து போட்டியில் ஏற்பட்ட (சூப்பர் 8 போட்டியில் நியூசிலாந்தை புரட்டிப் போட்டு மொத்தி எடுத்தது நினைவிருக்கலாம்) அதே கதிதான் தென் ஆப்பிரிக்காவுக்கும் என சவால் விட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்.
தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதிக்குள் நுழையவே தட்டுத் தடுமாறிப் ேபாய் விட்டது. இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம்தான் அது அரை இறுதிக்கு வர முடிந்தது.
இந் நிலையில் வலுவான ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா சமாளித்து இறுதிக்கு முன்னேறுமா? ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற
எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி வரும் 24ம் தேதி நடக்கிறது. இதில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகிறது.
இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
இறுதிப் போட்டியில் எப்படியும் ஆஸ்திரேலியா நுழைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்குள் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை நிறுத்துமா? அல்லது இறுதிப் போட்டியில் இலங்கை அல்லது நியூசிலாந்து அணிகளில் எந்த அணி ஆஸ்திரேலியாவை அமுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications