இந்திய வீரர்கள் தேர்வு-இனி, சுழற்சி முறையில்..
மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர்கள் இனி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என முன்னாள் இந்திய அணி வீரரும், இந்திய தேர்வுக்குழு தலைவருமான வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் வங்காள தேசத்தில் சுற்றுபயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் போட்டியில் இருந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், கங்குலியும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வங்காளதேச தெடாருக்கான அணி தேர்வு குறித்து வெங்சர்க்கார் கூறியதாவது,
அனுபவம் வாய்ந்த கேப்டன் தலைமையில் இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா எங்களுக்கு கடிதம் அனுப்பினார்.
அதன் அடிப்படையிலும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பாவர் சிறந்த அணியை தேர்வு செய்யும்படியும் கேட்டுக்கொண்டதான் படியும் தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்தோம்.
இதில் எந்தவிதமான அறிவுறுத்தலும் இல்லை. சச்சினும், கங்குலியும் மிகச் சிறந்த வீரர்கள். இருவரும் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளனர். அவர்களை அணியில் நீக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
வரும் காலக்கட்டத்தில் இந்திய அணி 45 ஒரு நாள் போட்டியிலும், 15 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
எனவே சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை பொறுத்து வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் சச்சினுக்கும், கங்குலிக்கும் வங்கதேச சுற்றுப்பணத்திற்கு இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்காது. இது டிராவிட்டுக்கும் பொருந்தும்.
இனி வரும் போட்டிகளில் அனைத்து வீரர்களும் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்படும். ஒரு வீரர்கள் ஒரு ஆண்டில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. எனவே இனி வரும் போட்டிகளில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும்.
பார்மை இழந்து தவித்து வரும் ஹர்பஜன் சிங், பதான், அகார்கர் ஆகியோர் தங்களது திறமையை நிரூபித்தால் அடுத்து வரும் தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வங்கதேசத் தொடரில் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் தெடாக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். கார்த்திக் திறமையான பேட்ஸ்மேன் அவர் எந்த நேரத்திலும் தைரியமாக விளையாடக் கூடியவர். அதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடிய விதமே சிறந்த சான்றாகும் என அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications