மூணாறு தேனிலவு கொலை-தந்தை பல்டி்
தொடுபுழா (கேரளா):பரபரப்பான மூணாறு தேனிலவுக் கொலையில் கணவரை ஆள் வைத்துக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வித்யாவின் தந்தை நீதிமன்றத்தில் பிழற் சாட்சியம் அளித்தார்.
சென்னை பம்மலைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்கு முன்பே ஆட்டோ டிரைவர் ஆனந்த் என்பவருக்கும் இடையே காதல் இருந்தது.
![]() |
கல்யாணத்திற்குப் பிறகு அது கள்ளக் காதலாக மாறியது. இந்த நிலையில் தேனிலவுக்காக வித்யாவும், அனந்தராமனும் மூணாறு சென்றனர். அங்கு வித்யாவின் திட்டப்படி ஆனந்த்தும்,அவரது நண்பர் அன்புராஜ் என்பவரும் சேர்ந்து அனந்தராமனைக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக மூணாறைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் சமயோஜிதத்தால் 3 பேரும் பிடிபட்டனர். கைதான மூன்று பேர் மீதும் தொடுபுழா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.
நேற்று வித்யாவின் தந்தை சந்தானம் சாட்சியம் அளித்தார். ஏற்கனவே போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தனது வீட்டிலிருந்து வித்யா கைப்பட எழுதிய டைரி, வித்யாவின் கையெழுத்துக்கள் அடங்கிய நோட்டுக்களைக் கொடுத்ததாக கூறியிருந்தார் சந்தானம்.
ஆனால் நேற்று நீதிமன்றத்தில் அதை மறுத்து சாட்சியம் அளித்தார். அந்தக் கையெழுத்து வித்யாவுடையதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் ஆனந்த், அன்புராஜ் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி வித்யாவுடையதுதான் என்று அவர் ஒத்துக் கொண்டார்.
இதேபோல, ஆனந்த்தின் நண்பரான பாபு என்பவரும் நேற்று பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே அனந்தராமனின் நண்பர் ஒருவரும் (இவர்தான் தேனிலவு பயணத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்து தந்தவர்) வித்யாவுக்கு ஆதரவாக பல்டி அடித்து சாட்சியம் அளித்துள்ளதால் வழக்கின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications