புலிகள் பெயரில் ஜெ.வுக்கு மிரட்டல்-பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலைப் புலிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈக்காட்டுதாங்கலிலுள்ள ஜெயா டிவியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம் தேதி நெல்லையிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அக்கடிதத்தில், ஜெயா டிவியில் அரசை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரும். ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்கல் நடத்தப்படும் என்பது உறுதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் விடுதலைப் புலிகள், வெங்கடேசன், பாளை, என்ஜிஓபி காலனி என்று முகவரி இருந்தது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விசாரணையின்போது, அந்த முகவரியில் வாலிபர் ஒருவர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் எழுதினாரா அல்லது அவருக்கு எதிரிகள் யாராவது இவ்வாறு செய்தனரா என்பது குறித்து நெல்லை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு:
இந் நிலையில் மிரட்டலின் எதிரொலியாக ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரது போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயா டிவி அலுவலகம் மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications